Thursday, March 19, 2009

திராவிட மகாஜன சபை




இரங்கூனில் செல்வசெழிப்பாக வாழ்ந்தாலும் தமிழின மக்கள் எப்படி சாதியால் ஒடுக்கப்பட்டார்கள் ? தீண்டப்படாத மக்களாக ஒதுக்கப்பட்டது எப்படி ? என்றும் அவர்கள் விடுதலை குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தார். மீண்டும் ஊட்டி வந்து, தன் உறவினரான ரெட்டமலை சினிவாசன் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பட்டாபிராமன், மாதவராம், ஜானகிராமன்,ராஜாராமன் 4 மகன்கள் பிறந்தனர். இந்நேரத்தில் ஊட்டிக்கு ஓய்வொடுக்க ஆல்காட் அவர்கள் வந்திருந்தார். பண்டிதரும் ரெட்டமலை சினிவசனும் ஆல்காட்டை சந்தித்துப்பேசினார்கள். பல முறை விவாதித்தனர்.
மதம், பவுத்த மதம் குறித்து நிறைய விவாதித்தனர். இச்சந்திப்புகள் பண்டிதரை இனொரு திசைக்கு இட்டுச்சென்றது .
சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு பள்ளி ஒன்றை துவக்கி நடதிதிக்கொண்டிடுக்கும் அருட் பணியாளர் ஜான் ரத்தினம் அவர்களோடு பண்டிதருக்கு நட்பு ஏற்பட்டது. ஒத்தக்கருத்துகொண்ட இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ஜான் ரத்தினம் 1882 இல் திராவிடர் கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்திவந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக 1885 இல் "திராவிட பாண்டியன் " என்னும் இதழை துவக்கினார். அந்த இதழின் துணை ஆசிரியராக பண்டிதர் பொறுப்பேற்றார்.பின்னால் தமிழன் இதழ் சிறப்பாக நடத்தியதற்கு இந்த பின்புலமே காரணமாக இருந்தது. பண்டிதருக்கு அம்பிகாதேவி , மாயாதேவி என்ற இரு மகள்கள் பிறந்தனர்.


1 comment:

Register said...

john raththinam which caste?

Post a Comment