Monday, March 23, 2009

தமிழன் இதழ் 102 ஆண்டு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொல்தமிழர்கள் சாதியற்ற திராவிடர்கள் உரிமைகளைப் பற்றி பேசி, வேத பிராமணீயத்தை எதிர்த்து, சாதி ஒழிப்பு, சுயமரியாதை , பகுத்தறிவு, பிரதிநிதித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாகியண்டிதர் க. அயோத்திதாசரின் தமிழன் இதழ், 102 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
சென்னை இரயப்பெட்டையிலிருந்து புதன் தோறும் 19.06.1907 முதல் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் "ஒரு பைசாத் தமிழன்"என்று தனித்துவமாய் பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. இந்த இதழ் யாருக்காக வெளிவருகிறது எனவும் விளக்குகிறார். " உயர் நிலையும், இடைநிலையும் ,கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி , சரியான பாதை , நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காக, சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும் , கணிதவியலாளரும் இலக்கியவாதிகளும் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தமிழ் மனம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் கையொப்பம் வைத்திதனை யாதரிக்க கோருகிறோம் ." என அறிவிக்கிறார்.
இதழின் முகப்பில் "ஒரு பைசாத் தமிழன்" என்று இதழின் பெயரை புத்த குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் 'ஜெ ய து ' என்றும் வலப்புறம் 'மங்களம்' என்றும் எழுதியும் நடுவில் நன்மைக்கடைபிடி என எழுதி இரு புறமும் மலர் கொத்து என அழகுணர்வோடு மிக நேர்த்தியாக தன் இதழின் சின்னத்தை வடிவமைத்திருக்கிறார்.
முதல் இதழில் கடவுள் வாழ்த்து , அரசர் வாழ்த்து ,தமிழ் வாழ்த்து,
பூர்வத் தமிழொளி (அரசியல் தொடர்) வர்த்தமானங்கள் (நாட்டு நடப்புச்செய்திகள் ) சித்த மருத்துவ குறிப்புகள் இடம்பெற்றன.
ஓராண்டுக்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க " அச்சுக் கூடமும் பத்திரிகைப் பெயரும் மாறுதல் அடைந்தது" 26.08 .1908
என விளக்கமளித்து "ஒரு பைசா" நீக்கப்பெற்றது. பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு , வானிலை அறிக்கைகள், வாசகர் கடிதம் , அயல் நாட்டு செய்திகள் , விளம்பரம், நூல் விமர்சனங்கள் போன்றவை பிரசுரமாயின

தமிழகர்கள் அதிகம் வாழும் கர்நாடக, கோலார் தங்க வயல் , பர்மா தென்னாப்பிரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழன் இதழ் பரவியது.
இந்து மதத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகளை மிக கடுமையாக விமர்சித்தது.

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில்
வேத மத , பிராமணீய எதிர்ப்பு , சாதி ஒழிப்பு , தமிழ் மொழியுணர்வு , பகுத்தறிவு சமுக நீதி பிரதிநித்துவம் ,தலித் விடுதலை ,சுயமரியாதை இந்தி எதிர்ப்பு பெண் விடுதலை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல் கருத்துத் தொகுப்பை வழங்கிய தமிழன் இதழ் குறித்து யாரும் பேச தயக்கப்படுகிரர்கள்
இதழியலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன என்று நாம் உறுதியாக கூறலாம்.
2 comments:

சமரன் said...

அயோத்திசருக்கு வீரவணக்கம்

Bas Baskar said...

எங்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் எங்கள் குல தெய்வங்கள்

Post a Comment