Thursday, March 25, 2010

எம் சி ராஜா 1883 - 1943

" நாம் இந்த நாட்டில் சலுகைகளுக்கும் உரிமைகளுக்கும் உரியவர்கள் என்பதை மற்ற வகுப்பார் மறந்துவிட்டுப் பேசுகின்றனர். நாம் அறியமையிலேயே இருப்போம். நம்மை அவர்கள் ஆன்டுகொன்டே இருக்கலாம் என்று நினைப்பது பெருந்தவறாகும். நான் கேட்கிறேன் ஏன் நாம் அவர்களுக்கு அடங்கியவர்களக இருக்கவேன்டும்? - எம் சி ராஜா
(21-97-1922 - கோவில்பட்டி யில் நடந்த ஆதி திராவிட மாநாட்டில் பேசினார்)


எம் சி ராஜா அவர்கள் 1883 - ஆண்டு ஜூன் மாதம் 17 நாள் பரங்கிமலையில் (St.thomas Mount) யில் பிறந்தார். அவருடைய தந்தையார் மயிலை .திரு சின்னத்தம்பி பிள்ளை 1858 - ஆண்டின் புரட்சியில் பங்கேற்ற வீரர். அவர் தீண்டாமை தொல்லைக்களுகுக்குள்ளான சமுகத்தை செப்பனிட அயராது பாடுபட்ட சமுதாய தலைவர்களுள் ஒருவர் "சென்னை ஆதி திராவிட மகா ஜன சபை " - யின் தோற்றத்திற்கு காரணமாக இருந்தவர்.

ராஜா அவர்கள் ராயபேட்டை வெஸ்லின் மிசன் உயர் நிலை பள்ளியிலும் சென்னை கிறித்துவ கல்லூரியில் கல்வி பயின்றார்.

முதன் முதலில் அகில இந்திய அளவில் " தலித் அரசியல் "இயக்கத்தை தோற்றுவித்தவர். 'தலித்கள் தங்களுக்கென ஓர் அரசியல் அமைப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்" என்ற கருத்தை முதலில் விதைத்தவர். "சென்னை ஆதி திராவிட மகா ஜன சபையின் செயலாளராக (1892) இருந்தார். இந்திய முழுவதும் 537- பொது கூடங்கள் 106 - மாநாடுகள் நடத்தி தலித்களை விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலித்களை இழிவான பெயரில் அழைப்பதை எதிர்த்து "ஆதி திராவிடர்" என அழைக்க வேண்டுமென (1922) கேட்டுக்கொண்டார். நீதி கட்சி தலைவர்களில் ஒருவராக செயல் பட்டார் இந்திய அளவில் தலித் ஒருவர் (1919) சென்னை மாகான சட்ட மேலவை உறுபினராக, இந்திய பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார் *தலித்களுக்கு வாக்குரிமை, அரசியல் பிரதிநித்துவம் வழங்கவேண்டுமென கோரினார். தலித்களை தனித்த சமூகமாக கணக்கில் எடுத்துக்கொண்டு "தனி வாக்காளர் பட்டியலும், தனித்தொகுதிகளும் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

1 comment:

vadacurry esq. said...

Small correction.M.C.Raja was born in Mylapore or Royapettah??? and not in St.Thomas Mt.He shifted to St.Thomas Mt. during the Pulianthope riots of 1921-22.
His descendants still live in the house he built `Lallegro` which is situated in (M.C.) Raja Street,Alandur.

Post a Comment