Monday, August 22, 2011

திவான் பகதூர் இரட்டை மலை ஸ்ரீனிவாசன்












தலித் சாஹித்ய அகாடமி, சென்னை, 1999
Dalit Sahitya Akademi, Chennai, 1999

பதிப்புரை
Publisher’s Preface




அடுத்த நூற்றாண்டில் அடியெடுத்துவைக்கப்போகும் இந்த காலகட்டத்தில் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தலித் மக்களுக்காக பாடுபட்ட சிந்தித்த முன்னோடிகளின் கருத்துக்களை தேடித்தொகுத்து தரும் அரும்பணியை தலித் சாகித்ய அகாடமி மேற்கொண்டுள்ளது. இந்த விதத்தில் அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகளுக்கு அடுத்ததாக இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் ஜீவிய சரித்திர சுருக்கத்தை அவர் வாழ்ந்தகாலத்தில் வெளியிட்ட விதத்திலேயே இங்கே முன் வைக்கிறோம்.
In this moment of stepping into the next century, the Dalit Sahitya Akademi has taken up the great task of searching for and gathering the ideas of those forebears who struggled and thought about the dalit people. In this manner, after Ayothee Thass Pandit’s thoughts, we place before you here the brief autobiography of Rettaimalai Seenivasan, in the same way in which he had published it.

இரட்டைமலை சீனிவாசன் 1860 ஜூலை 7 – ஆம் நாளில் செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் என்னும் சிற்றூரில் பிறந்தார். தனது இருபத்திரண்டாம் வயது முதல் பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம்காட்டினார். 1891-இல் ஆதிதிராவிட மகாஜனசபையில் சேர்ந்து செயல்பட்டு பின்னர் அந்த அமைப்பின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
Rettaimalai Seenivasan was born on July 7, 1860, in the small town of Madhuranthakam in Chengelpet district. From his 22nd year onwards, he travelled to many cities and showed eagerness to know the history of the oppressed people. In 1891, he joined the Adi Dravida Mahajana Sabha and took up the responsibility of Secretary later.

1893-ல் அவர் துவக்கிய ‘பறையன்’ என்ற பத்திரிகை தாழ்த்தப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வேலையைத் திறம்படசெயதது. ஏழு ஆண்டுகள் அது தொடர்ச்சியாக வெளிவந்துள்ளது.
In 1893, the ‘Paraiyan’ journal, that he had begun, did its work of encouraging awareness among the oppressed people. It was published continuously for seven years.


பறையர்களை முன்னேற்ற வேண்டுமென்ற தன் லட்சியத்துக்கு ஆதரவு திரட்டவேண்டி லண்டன் செல்ல முடிவெடுத்து பயணத்தைத் துவக்கினார். உடல் நலக்குறைவினால் அவர் வழியில் வடஆப்பிரிக்காவில் சிலகாலம் தங்க நேர்ந்தது. அதன்பின் தென் ஆப்பிரிக்கா சென்றார். அங்கு பதினாறு ஆண்டுகள் அரசுப் பணியாற்றினார். அப்போது காந்தியின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.
To gather support for his goal of bringing progress to the Paraiyar, he decided to go to London and set out on his journey. He was forced to spend some time in North Africa because of ill-health. After this, he went to South Africa. He worked in government service there for sixteen years. He was introduced to Gandhi there. He had the opportunity also of working as his translator.


1923-ல் சட்டசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு நற்சேவைபுரிந்தார். அவரது சேவைகளுக்காக ராவ்சாகிப், ராவ்பகதூர், திவான்பகதூர் ஆகியபட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. பதினைந்து ஆண்டுகள் அவர் சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றினார்.
In 1923, he was appointed as a legislative assembly member and performed excellent service. For his services, he was given the titles of Rao Sahib, Rao Bahadur and Diwan Bahadur. He was a legislative assembly member for 15 years.


1931-ல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களுடன் சென்று கலந்து கொண்டார். காந்தி தாழ்த்தப்பட்ட்ட மக்களின் பிரதிநிதியாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முயன்றபோது அந்த மோசடியை முறியடிக்க அம்பேத்கருக்கு பக்கபலமாக இருந்தவர் இரட்டைமல சீனிவாசன் ஆவார்.
In 1931, he participated with Ambedkar in the Round Table conference in London. He stood by Ambedkar to block Gandhi’s dishonest attempts to project himself as the representative of the Depressed Classes.


தாழ்த்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக அயராது உழைத்த இரட்டைமலை சீனிவாசன் 1945 செப்டம்பர் 18-ஆம் நாள் இறந்தார்.
Rettaimalai Seenivasan, who worked tirelessly for the benefit of the oppressed people, died on September 18, 1945.


தனது வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து அவரே எழுதிவெளியிட்ட சுருக்கமான சுயசரிதைதான் ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ என்னும் இந்நூலாகும்.
He put together some of the important incidents in his life and published a brief autobiography, ‘Jeeviya Sariththira Surukkam’, which is this book.


இந்த நூல் மிகவும் சிறியதாக இருப்பினும் தலித் மக்களின் விடுதலைப்போரில் மிகப்பெரும் ஆயுதமாக அமையுமென்பது உறுதி.

Though this book is very small, it is certain that it will be a very large weapon in the war for the Dalit people’s freedom.


வரலாற்றை அறிந்து கொள்பவர்கள்தாம் அதை மாற்றுபவர்களாக இருக்கமுடியும். அவ்வகையில் தலித் மக்கள் தம் சொந்த வரலாற்றை அறிந்துகொள்வது முதன்மையானது. அதற்கு இந்த நூல் உதவியாய் அமையும் என நம்புகிறோம்.
Only people who have learnt their history can change it. In this way, it is of foremost importance that Dalit people learn their own history. We believe that this book will be useful for this.

இந்த நூலின் மூலப்பிரதியை தம் நூலகத்திலிருந்து படிஎடுத்துக்கொள்ள அனுமதித்த பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துக்கும் (French Institute of Pondicherry) இதில் சிதைந்து போயிருந்த சில பக்கங்களைக் கொடுத்து உதவிய வே. அலெக்ஸ் (மதுரை) அவர்களுக்கும் எமது நன்றி.
We thank the French Institute of Pondicherry for giving us permission to take copies of the original text and V. Alex (Madurai) for giving us some of the pages that were damaged.

டிசெம்பர் 1999 தலித் சாகித்ய அகாடமி
December 1999 Dalit Sahitya Akademi


முகவுரை
அநேக ஆயிரம் வருஷங்களில் மிக சொற்பமான ஐம்பது வருஷ காலத்தில் தற்போது ஆதி திராவிடர்களென்றழைக்கப்படும் சமூகத்தவர்களடைந்த அபிவிருத்தியை என் ஜீவிய சரித்திரத்தில் கண்டிருக்கிறேன். ஆதி திராவிட சமூக சரித்திரத்தில் இந்த சரித்திரமும் சேர்க்கப்படுமென்பது என் நோக்கம்.


Preface
I have seen the improvement of the society that is now known as the Adi Dravidas within these measly fifty years of my lifetime – out of many thousands of years. It is my aim that this history should be added to the social history of the Adi Dravidas.

இதர சமூகத்தவர்களும், சமயத்தவர்களும் , இச்சமூகத்தவர் முன்னேற்றத்தை நாடி செய்து வந்திருப்பது தன்னயத் தேட்டம் என்றும், இச் சமூகத்தவர்கள் தங்கள் இடைவிடா முயற்சியால் விருத்திபெற்று வருகிறார்கள் என்றும் இச்சரித்திரத்தால் விளங்கும்.

It will be understood through this historical account that all that was done by those of other communities and religions for the progress of these people was a personal quest only, while the people of this society have been doing well for themselves by ceaseless effort.

திவான் பஹதூர் இரட்டைமலை ஸ்ரீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்

ஆதிதிராவிடர்கள் அபிவிருத்தியை நாடி அரசாங்கத்தார் அனுசரணையைக் கொண்டு ஐம்பது வருடங்களாய் உழைத்த ஜீவிய சரித்திரத்தை வெகு சுருக்ககமாக குறிக்கப்பட்டிருக்கிறது.


Diwan Bahadur Rettaimalai Srinivasan – A brief autobiography
The autobiography of fifty years of labouring for the development of the Adi Dravida with the assistance of the government has been given here in great brevity.

ராவ் சாஹிப் இரட்டைமலை ஸ்ரீனிவாசன்
தன் சமூகத்தினருக்கு ஒரு ஞானியாகவும், வழிக்காட்டியாகவும், சிநேகிதனாகவுமிருந்து, அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்றார்.
செங்கல்பட்டு கலெக்டர்

Rao Sahib Rettaimalai Srinivasan
By being a wise man, a guide and a friend to those of his community, he has gained their respect.
Chengelpet Collector


அரசாங்கத்தார் அபிப்பிராயம்
The opinion of the government


“1926 பிப்ரவரி 20 சனிக்கிழமையன்று சைதாப் பேட்டியில் கூடிய தர்பாரின்போது மா ஸ்ரீ இரட்டைமலை ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மேன்மை பொருந்திய (H.E.) இராஜ பிரதிநிதியாகிய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் அவர்கள் ராவ்சாஹிப் பட்டமும் அதற்கு அறிகுறியாகிய ஓர் சின்னமும் கொடுத்ததை முன்னிட்டு செங்கல்பட்டு கலெக்டர் கணம் P. சீதாராமையா பந்தலுகாரு. M.A. கீழ்கண்டவாறு சொற்பொழிவாற்றினார்:-


On February 20, 1926, at the Darbar that gathered at the Saida Pettai, His Excellency the royal representative, India’s Governor General, gave Sri Rettaimalai Srinivasan the Rao Sahib title and a symbol to mark the giving of the title. Upon this occasion, the Chengelpet Collector the honourable P. Seetharamaiah Panthalakaru M.A. spoke as is given below:-


“அடுத்தபடியாக கௌரவத்தை ஏற்கும் பாக்கியம் பெற்றவர் தற்சமயம் பூந்தமல்லியில் வசிக்கும் மா ஸ்ரீ இரட்டைமலை ஸ்ரீநிவாசன் அவர்களாவார். இப்பொழுது இவர் 65 வயதான வயோதிகப் பருவமடைந்த பெரியார். ஆதி திராவிடர்களுக்காக பாடுபடும் வீரர். இவர் கோயம்புத்தூர் கலாசாலையில் கல்வி பயிற்சிபெற்று கணக்கு நிர்வாகத்தில் பிரத்தியேக திறமையடைந்தார். தான் பிறந்த குலத்திற்கு தன்னால் கூடியவாறு ஊழியம் செய்வதே இவருடைய முக்கிய கொள்கை. 1891 இவர் பொது ஊழியத்தில் ஈடுபட்டு சென்னை (பறையர் மகாஜன சபை) ஆதி திராவிட மகாஜன சபையை நிர்ணயித்தார். 1893 இல் “பறையன்” என்னும் வெறுக்கத் தக்க பெயரின் காரணமாக பல தலைமுறைகளாக அநேக கஷ்டங்களுக்குள்ளாக்கப்பட்டு வரும் தன் ஜாதியினரை முன்னேற்றமடைவிக்க கருதி ‘பறையன்’ என்னும் ஒரு பத்திரிக்கையை பிரசுரிக்க ஆரம்பித்தார்.












The one who has the blessing of receiving this honour next is Sri Rettaimalai Srinivasan, who currently resides in Poonamallee. He is now a great elderly man of 65 years of age. A hero who struggles for the Adi Dravidar. He received education at the school of arts in Coimbatore and acquired great skill in keeping accounts. It was his principal ideal to perform as much service as he was able to the people of the clan into which he was born. In 1891, he entered public service and established the Chennai (Parayar Mahajana Sabha) Adi Dravida Mahajana Sabha . In 1893, he took ‘Paraiyan’, that hated name that had put many generations to great hardship, and with the aim to develop people of his caste, he began to publish a magazine called ‘Paraiyan’.


1893 டிசெம்பர் 23 யன்று தன்னுடைய மக்கள் உணர்ச்சிப்பெற்று எழும்புமாறு ராயப்பேட்டை வெஸ்லியன் மிஷன் மண்டபத்தில் ஓர் பெரிய கூட்டம் கூட்டினார். 1895 அக்டோபர் 23 டவுன் ஆளில் என்றும் இதுவரையில் இவர்களால் நடத்தப்படாத ஒரு பெரிய கூட்டம் கூடினது. முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன்பே மிஸ்டர் . ஸ்ரீநிவாசன் (தங்கள் உரிமைகளை உணர்ந்து வாதாடி வாங்க சக்தி இல்லா) மௌனிகளாயிருந்த ஆதி திராவிடர்களுக்கு முதன்முதலாக (தங்கள் உரிமைகளை உணர்ந்து அவற்றை வெளியிடும்) உணர்ச்சியை அளித்தார். சிதருற்று இருந்த இந்த வகுப்பினர் ஒன்று சேர்க்கப்பட்டு மற்ற ஜாதியினரைப்போல் இந்திய தேசத்தில் ஒரு தனிப்பட்ட வகுப்பினறேன்ற பொறுப்பையடைந்தார்கள். 1895 டிசம்பர் 6 என்றும் மறவாத ஒரு விசேஷ நாள். இவர் அப்போது இருந்த வைசிராயும் இந்தியாவின் கவர்னர் ஜெனரலுமான மேன்மை பொருந்திய (H.E.) எல்ஜின் பிரபுவின்முன் ஆதி திராவிடர்களின் பிரதிநிதிக்கூட்டம் ஒன்றைக் கொண்டுபோனார். 1896 ஆதி திராவிடர்களின் சார்பாக சென்னை கவர்னராக இருந்த மேன்மை பொருந்திய (H.E.) வென்லாக் பிரபு இங்கிலாந்திற்குப் பிரிந்து போகும்பொழுது அவருக்கு பிரியானுபசாரப் பத்திரிகை ஒன்றைவாசித்துக் கொடுத்தார்.

On December 23, 1893, he gathered people for a huge meeting at the Royapettah Wesley Mission Hall so that his people may be filled with emotion and arise. On October 23, 1895, at Town Hall, a meeting of a size that has never been held by them so far was conducted. Even before 32 years, for the first time, Mr. Srinivasan had given to the silent Adi Dravida (without the strength to realise, argue for and get their rights) some emotion (to realise their rights and express them). The scattered people of this community were united and, like the other castes, took the responsibility of becoming a unique community within the Indian country. December 6, 189, is special day that will never be forgotten. He took a representative group of Adi Dravidas to meet the then-Viceroy and Governor General, His Excellency Lord Elgin. In 1896, on behalf of the Adi Dravidar, he read out a message of farewell and good wishes to the former Chennai Governor, His Excellency Lord Wenlock, when he was leaving for England.


1900 இல் Mr. ஸ்ரீநிவாசன் இங்கிலாந்திற்குப் போகும் வரையில் ‘பறையன்’ என்னும் பத்திரிகை நடந்து வந்தது. பிறகு அவர் தென் ஆப்பிரிக்காவிற்குப்போய் யூனியன் கவர்ன்மெண்டில் 1904-ஆம் வருடம் வேலையிலமர்ந்தார். பதினாறு வருடம் விசுவாசத்துடன் வேலை செய்த பிறகு இரண்டு வருடம் கிழக்கு ஆப்பிரிக்கவிலிருந்துவிட்டு இவர் வேலையினின்றும் நீங்கினார். 1921-ல் தனது இந்திய நாட்டுக்குத் திரும்பினார். தன்னுடைய ஜனங்கள் தன்னம்பிக்கை, மதுபானமின்மை, மட்டான செலவு முதலிய நற்குணங்களை விருத்தி செய்யும்வரையில் முன்னேற்றம் அடைய மாட்டார்கள் என்பது இவருடைய நம்பிக்கை. ஆதி திராவிடர்கள் இராஜ விசுவாசத்துடன் இல்லா விட்டால் தங்களை ஆளும் அதிகாரிகளின் அநுதாபத்தை இழந்துவிடுவார்கள் என்பதை இவர் ஆராயந்துணர்ந்தார். இவர் தென் ஆப்பிரிக்காவிலும் தென்னிந்தியாவிலும் வசிக்கும் தன் சமூகத்தினருக்கு ஒரு ஞானியாகவும், வழிக் காட்டியாகவும், சிநேகிதனாகவுமிருந்து அவர்களுடைய நன் மதிப்பை பெற்றார்.


Until Mr. Srinivasan went to England in 1900, the magazine ‘Paraiyan’ was run. He then went to South Africa and started working with the Union Government in 1904. After sixteen years of working faithfully for them, he spent two years in East Africa and left his job. In 1921, he returned to his country, India. He believed that his people would not develop unless they develop the virtues of self-confidence, abstinence from alcohol and economic expenditure. He had thought and arrived at the realisation that unless the Adi Dravida work with belief in the King, they would lose the sympathy of their governing officers. By being a wise man, a guide and a friend to those of his community, he has gained their respect.


தன் தாய்தேசத்திற்கு திரும்பிய இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்னை சட்டசபை அங்கத்தினராக ஆதி திராவிடர்களின் நன்மைக்காக கண்ணும் கருத்துமாய் உழைத்துவருகிறார். தான் பிறந்த குலத்தின் முன்னேற்றத்திற்காக சுமார் 35 வருட காலங்களாக இவர் தளரா ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் உழைத்து வயோதிகப் பருவமும் அடைந்தார். இம்மாதிரியான அமரிக்கையும் வெளிப்பிரஸ்தாபமும்மற்ற ஊழியத்தின் பலனாக இவர் தன் வகுப்பினரின் நன்னோக்கத்தையும் மரியாதையையும் பெற்று இருக்கிறார். வகுப்புவாத கிளர்ச்சிகளில் ஈடுபடாத நற்குணத்தினால் இவரை மற்ற வகுப்பிலிருக்கும் பொதுநல ஊழியர்களும் கௌரவிக்கின்றனர். நம்முடைய இராஜ தானியில் பேதைகளாய் இடுக்கண்களுக்குள்ளாகிக் கிடக்கும், ஆயிரக்கணக்கான மக்களினிடையே முதன்முதலாகத் தோன்றி உழைத்துவந்த இவருடைய உபகாரத்திற்காக அரசாங்கத்தார் இவருக்கு ராவ்சாஹிப் என்னும் பட்டத்தை மகிழ்ச்சியுடன் அளிக்கிறார்கள். இவர் என்றும் பொதுமக்களிடையே உழைத்து வரவேண்டுமென்று விரும்பி என்னுடைய நற்கோரிக்கைகளை கொடுப்பதோடு மேன்மைபொருந்திய இராஜபிரதினிதியாகிய இந்தியாவின் கவர்னர்ஜெனரல் அவர்களால் அளிக்கப்பட்ட ராவ்சாஹிப் பட்டத்தையும் அதற்கான ஒரு சின்னத்தையும் மனப்பூர்வமாய் பரிசளிக்கிறேன்.”


Two years after returning to his motherland, he laboured with great care and dedication for the welfare of the Adi Dravida as a member of the Legislative Assembly. Working with tireless motivation and enthusiasm for the progress of the clan into which he was born for some 35 years, he has reached his old age. As the fruit of such dedicated and unpretentious service, he has received the trust and respect of his community. For his virtue of not indulging in caste-based stirs, he has been felicitated by public servants from various communities. From the innocents who have been made to stumble upon obstacles within our royal estate, among the thousands for the first time he has arisen with his labour and for this service the government gives him the title of Rao Sahib with joy. Along with my pleas that he should continue to work among the common people, I wholeheartedly gift him this Rao Sahib title given by the royal representative, India’s governor general, and the symbol for it.


இந்த புத்தகத்தின் பதிப்புரை இங்கே, அரசாங்கத்தார் அபிப்பிராயம் என்னும் அத்தியாயம் இங்கே.


The publisher’s preface to the book is here, the chapter titled the ‘Government’s Opinion’ is here.


ஜீவிய சரித்திர சுருக்கம்


[மூல பிரதியில் ஒரு வரி சிதைந்துபோயுள்ளது]…காலத்தில் தஞ்சாவுரிலிருந்து வியாபார சார்பாக சென்னை பட்டணம் வந்ததாக என் பெரியோர்கள் சொல்வார்கள்.


[One line missing in the text received]…in this time, my elders say, our ancestors came to Chennai city from Thanjavur for purposes of trade.


நான் செங்கல்பட்டு கிராமங்களிலோன்றில் 1860-ம் வருஷம் பிறந்தேன். கோயம்புத்தூர் கலாசாலையில் நான் வாசித்தபோது சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர். ஜாதி கோட்பாடுகள் மிக கடினமாய் கவனிக்கப்பட்டன. பிள்ளைகளிடம் சிநேகித்தால் ஜாதி, குடும்பம், இருப்பிட முதலானவைகளை தெரிந்துகொண்டால் அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக்கொண்டிருந்து பள்ளி ஆரம்ப மணி அடித்தபிறகு வகுப்புக்குள் போவேன். வகுப்பு கலையும்போது என்னை மாணாக்கர்கள் எட்டாதபடி வீட்டுக்கு கடுகான நடந்து சேருவேன். பிள்ளைகளோடு கூடி விளையாடக் கூடாமையான கொடுமையை நினைத்து மனங்கலங்கி எண்ணி எண்ணி இந்த இடுக்கத்தை எப்படி மேற்கொள்ளுவதென்று யோசிப்பேன். கணக்கர் தொழிலில் தேர்ந்து நீலகிரி என்னும் மலைநாட்டில் ஐரோப்பிய வியாபாரசாலைகளில் கணக்கராக இருந்த பத்து வருடகாலமட்டும் தீண்டாமை என்பதை எப்படி ஒழிப்பதென்னும் கவலை எனக்குள் ஓயாமலிருந்தது.

I was born in one of the villages of Chengelpet in the year 1860. When I was reading in the Coimbatore School of Arts, out of about 400 children, except 10 of them, all of them were Brahmin. The rules of caste were maintained with great strictness. Afraid that the children should find out about my caste, family and the place I live in, if I became friendly with them, I would sit somewhere outside the school, reading, until after the first bell was rung. When classes were dismissed, I would walk as fast as I can home, so that the students wouldn’t be able to keep up with me. Thinking repeatedly about the cruelty of not being allowed to join other children in play, I would grow sad and think about how to overcome this obstacle. I joined the profession of accountancy and worked in European trading houses in the hill country of Nilgiris for ten years and the worry about how to destroy untouchability was constantly with me.


1890-ம் வருஷம் சென்னைக்கு வந்து “பறையர்” என்போரை இதர ஜாதியாரைப்போல் மேல் நிலைக்கு கொண்டுவந்து மதிக்கும்படி செய்வதெப்படி என்று மூன்று வருடமாய் பல ஆராய்ச்சிகள் செய்தேன். தெற்கு நோக்கி ரெயில் மார்க்கமாகவும் பெரும்பாலும் நடந்தும் கும்பகோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில், தோல்காசு நந்தன், கலம்பகம் பாடிய நந்தன், கம்மாளர் கட்டியிருந்த காந்த கோட்டையானது சாம்பவ ராஜகுமாரியால் அழிக்கப்பட்டது, திருநாளைப்போவார் என்னும் நந்தனார் நின்று துதித்த ஊமைகுலக் கரை, அதையடுத்த மடம், திருச்சிராபள்ளி சாம்பவ சாம்பான், தஞ்சாவூர் பிரவியடை சாம்பான் பெரியநாயகி, மாரியம்மை, திருவாரூர் தியாக சாம்பான் முதலானவர்களைத் தகனம்செய்த இடங்களில் கட்டியிருக்கும் திருப்பணிகள், யானையேரும் பெரும்பறையன் சமாதி, அவர் சந்ததியாருக்கு திருவாரூர் தியாக சாம்பான் ஆலயத்திலுள்ள உரிமைகள், அவர்கள் வளவில் ஒரு இரவு தங்கி விசாரித்துக் கொண்டு பல தேவாலயங்களை அடுத்து ஆங்காங்குள்ள இவ்வினத்தவர்களைக் கண்டும் குளிக்கவும் குடிக்கவும் நீரற்று, வசிக்கும் குடிசை நிலையற்று, நடக்க பாதையற்று, பிழைக்க வழிவகையற்று, எங்கு சென்றாலும் தீண்டாமை என்னும் கொடுமைக்காளாகி, வாய்திறந்து பேசினால் அடி படுவதுமான குறை கோள்களைக் கேட்கும் அதிகாரிகளும், ஜாதி இந்துக்களுக்கு அஞ்சி வஞ்சகமாய் நடப்பதுமான ஆற்றொன்ன துன்பத்த்நின்று அவர்கள் படும் துயரத்தை யுனனர்ந்து பூர்வ சரித்திரத்தையும் விசாரித்தறிந்து திரும்பினேன்.


In 1890, I came to Chennai and undertook research for three years on how I could bring those called ‘Paraiyar’ to a higher state, like those of other castes, and make others respect them. I would walk great distances towards the South along the railway line and look at the destroyed walls of the Nandan fort in Kumbakonam, Tholkaasu Nandan, the Nandan who sang the Kalambagam, the Kandha Fort that was built by the Kammalar and wiped out by the Sambava princess, the Oomai Lake by the shores of which the Nandanar called Thirunaalaipovar had sung his praises, the Mutt next to it, the places where Tiruchirapalli Saambava Saambaan, the Thanjavur Saambaan Periyanaayagi, Maariammai, Thiruvarur Thiyaga Sambaan had offered sacrifices and the structures built in those places, the Samadhi of the Perumparaiyan who rode on elephants, the rights that his descendants have in the Thiruvarur Thiyaga Sambaan temple. Staying in these parts for a night, I would inquire about such things, see these people living next to several temples without water to bathe or drink, living in temporary huts, without paths to walk in and without ways to survive, subject to the cruelty of untouchability wherever they went, who were beaten if they should so much as open their mouths and talk, living in fear of officials and caste Hindus and practising deceit out of fear, living in sorrow that cannot be ameliorated, realising the pain they suffered, I would learn of our old history and return.


சர்க்கார் ரிக்கார்டுகளை பரிசோதித்து பார்த்தபோது 1772-ம் வருஷ முதல் இவ்வினத்தவர் பொருட்டாய் அவர்கள் கவலை எடுத்துவந்ததாக காணப்பட்டது. 1818-ம் வருஷம் இவ்வின குடியானவர்கள் முன்னேற்றமடைய வழிவகைகளைத் தெரிவிக்கும்படி கலெக்டர்களை ரேவிநியுபோர்டார் கேட்டிருந்தார்கள். அது எப்பிடியாயிற்றென்று தெரியவில்லை. 1893 – ம் வருஷம் கல்வி கற்பித்து கொடுக்க தலைபட்டார்கள். 120 வருஷம் தூண்டுவாரற்று இருந்தார்கள். 1893-ம் வருஷம் சர்க்கார் வெளியிட்ட உத்தரவை ஒரு சிலாசாசனமாய் இவ்வினத்தார்கள் எண்ணினாலும் பலிதபடாமல் போய்விட்டது. அதற்கடுத்த படியாகத்தான் 1893-ம் வருஷம் ‘பறையன்’ என்ற பத்திரிக்கையை தூண்டுகோலாக வெளியிட்டேன்.


Looking through the old records of the Sarkar, it could be seen that they have been concerned about these people from 1772. In 1818, the Revenue Board had asked Collectors to find ways in which these people could be helped to progress. It is not known what became of that request. In 1893, they sought to impart education to these people. They had lain for 120 years with none to care for them. Though these people were enthused by the orders that were issued by the Sarkar in 1893, they did not receive the fruits of it. Next, in 1893, I published ‘Paraiyan’ as a provocation to action.


இந்த ராஜதானியில் பேதைகளாய் இடுக்கன்களுக்குள்ளாகிக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியிலேயே முதன்முதலாக தோன்றி உழைத்து வந்த என் உபகாரத்திர்காக அரசாங்கத்தார் எனக்கு ராவ்சாஹிப் என்னும் பட்டம் 1926-ம் வருஷம் ஜனவரி மாதம் 1-ந் தேதியிலும், ராவ்பஹதூர் பட்டம் 1930-ம் வருஷம் ஜூன் மாதம் மூன்றாம் தேதியிலும், திவான்பஹதூர் என்னும் பட்டம் 1936-ம் வருஷம் ஜனவரி மாதம் 1 -ந் தேதியிலும் மகிழ்ச்சியுடன் அளித்திருக்கின்றார்கள்.

From the many crores of innocents who have been made to stumble upon obstacles within our royal estate, for being the first one to rise and labour for them, the government delighted in giving me the Rao Sahib title on January 1, 1926, the Rao Bahadur title on June 3, 1930 and the Diwan Bahadur title on January 1, 1936.




இந்த புத்தகத்தின் பதிப்புரை இங்கே, எழுத்தாளரின் முகவுரையும, அரசாங்கத்தார் அபிப்பிராயம் என்னும் அத்தியாயம் இங்கே. ஜீவிய சரித்திர சுருக்கம் இங்கே துவங்குகிறது.






The publisher’s preface to the book is here, the author’s preface and the chapter titled the ‘Government’s Opinion’ is here. The brief autobiography begins here.


பத்திரிகை 1893-ம் வருஷம்




Journal in the year of 1893


நான்! நான்!! என்ற மகா மந்திரத்தை ஜெபித்து கொண்டிருப்பவன் தன்னையுணர்ந்து சகலமுமரியும் ஞானியாகி தலைவனை காண்பதுபோல நான்! நான்!! என்று எவன் ஒருவன் தன்னையும் தன் இனத்தையும் மறுக்காமல் அச்சமும், நாணமுமில்லாமல் உண்மை பேசி தன் சுதந்திரத்தை பாராட்டுகிரானோ அவன் மதிக்கபெற்று இல்வாழ்க்கையில் சம்பத்துள்ளவனாய் நித்தியா சமாதானத்துடன் வாழ்வானாகையால் பறையர் இனத்தவனொருவன் “பறையன் என்பவன் நான் தான்” என்று முன்வந்தாலோழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தரித்திரனை இருப்பானாகையால் “பறையன்” என்னும் மகுடம் சூட்டி ஒரு பத்திரிகை பிரசூரித்தேன். அது 1893 அக்டோபர் வெளியாயிற்று. நாலு பக்கங்களுள்ள ஒரு சிறிய மாதாந்திர பத்திரிகை. விலை பிரதி ஒன்றுக்கு அணா இரண்டு. அதை கண்ட பறையர் என்று என் குலத்தவர்கள் வெகு ஆவலுடன் அங்கீகரித்தார்கள்.


He who is chanting the great mantra of ‘I! I!!’ will understand himself and become all-knowing and all-seeing. Similarly, he who says, ‘I!I!!’ of himself and speaks the truth of his race without fear or embarassment and celebrates his freedom, he will lead a respectable family life with good property and eternal peace. Therefore, unless a member of the ‘paraiyan’ clan comes forward and says ‘I am a Paraiyan’, he will not be able to celebrate freedom and will remain oppressed and a pauper. Therefore, I published a journal crowned with the name ‘Paraiyan’. It was published in 1893 October. It was a small monthly with four pages. It cost 2 annas per copy. People of my clan, the ones named ‘Paraiyar’, endorsed it with great enthusiasm.


விளம்பரத்திற்கும் முதல் சஞ்சிகை பதிப்புக்கும் ரூ. பத்து செலவானது. இரண்டு நாளையில் சுமார் நானூறு பிரதிகள் சென்னை நகருக்குள் விற்கப்பட்டன. மூன்று மாதத்திற்கு பிறகு வாராந்திர பத்திரிக்கையாகவும் இரண்டு வருஷத்திற்கு பிறகு ஒரு அச்சுயந்திர சாலையுமேற்பட்டுவிட்டது. பறையர் என்று ஜன அங்கத்தவர்களுக்காக பரிந்து பேசவும், கவர்ன்மெண்டார் அனுக்கிரகத்தை நாடியும், நல்லொழுக்க ஆசாரங்களைப் பற்றியும் பத்திரிகை பிரஸ்தாபித்து வந்தது. இந்த ஜனாங்கத்தவர்கள் எங்கெங்கே கூடுகிறார்களோ அங்கங்கே உற்சாகமாய் பேசி வந்தார்கள். தாங்களும் ஒரு சமூகத்தவர்கள் என்று நிரூபிக்க 1895 அக்டோபர் 7 மாலை வெள்ளை கொடிபிடித்து பாண்டு வாத்தியங்களுடன் பெருங்கூட்டமாய் சென்னை விக்டோரியா மகா மண்டபத்திற்குள் பிரவேசித்து தங்கள் அருமை பெருமைகளை பிரஸ்தாபித்து வெகு விமரிசையாக கூட்டத்தை நடத்தினார்கள். இந்த இனத்தவர்கள் முதன் முதலாய் விக்டோரியா மண்டபத்தி கூடியது அப்பொழுது தான்.


To advertise it and for the first print run, Rs. 10 was spent. In two days, some 400 copies were sold inside Chennai city. In three months, the journal became a weekly, and after two years, there was a printing press. The journal spoke in favour of that section of society called Paraiyar, sought the support of the government and discussed the codes of good conduct. Wherever this section of society gathered, there they discussed this journal with great enthusiasm. To prove that they, too, were a community, they went to the Chennai Victoria Hall in a large group, holding white flags and accompanied by a band and music. They established their pride and glory and held a grand meeting. That was the first time that people of this clan had gathered in the Victoria Hall.


கிராமமுனிசீப்புகள் முதல் கலெக்டர் கச்சேரிகளிலும் ரெவினியூ போர்டிலும் மற்றுமுள்ள இலாக்காகளிலுமுள்ள ஜாதி இந்துக்கள் பல சூட்சமங்கள் செய்துவந்தார்கள். காங்கிரஸ்காரர்களும் ஜாதி இந்துக்களும், மதமாற்றம் பிரசாரிகளும் இந்த ஜனாங்கத்தவர்களுக் குள்ளேயே ஒரு பிரிவாரும் எதிர்த்து நின்றார்கள். எதிர் பத்திரிகையும் வெளியிட்டார்கள். மற்றும் சில பத்திரிகைகள் பலமாய் தாக்கின. இந்த இனத்தவரிலோருவர் போய் பிராது செய்து நான் தேசத்தைவிட்டு ஓடிப்போக இருப்பதாக வாரண்டில் என்னை பிடித்து அவமானப்படுத்த பார்த்தார். அது பலிதமாக வில்லை. 1896 “பறையன்” பத்திரிக்கை கடிதக்காரர் ஒருவர் ஏதோ அவதூறான விஷயம் எழுதியதை பத்திரிகையில் வெளிப்படுத்தினத்தின் காரணமாகக் கொண்டு இவ்வினத்தவரின் ஒரு பிரிவார் என்னை கோர்ட்டுக்கும் இழுத்தார்கள். கோர்ட்டுக்கு இந்த இனத்தவர் பெருங்கூட்டமாய் வந்தார்கள். அவர்கள் தலைச்சீராக்களிலும், மார்புகளிலும் “பறையர்” என்ற மகுடத்தை பூண்டு பண முடிப்புகளுடன் கோர்ட்டுக்கு வந்தார்கள். நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை யார் கொடுத்தார் என்று தெரியவில்லை. தங்களினத்தில் வைத்திருந்த பற்றுதலையும் அன்பையும் வெளிப்படையாக காட்டினார்கள். இதனால் இந்த இனத்தவர் வாய் திரக்கப் பட்டதற்கும் முன்னேறி வந்ததற்கும் சபைகளும் சமூகமுமேற்றப் பட்டதற்கும் “பறையன்” என்ற பத்திரிகையே மூலகாரணமென விளங்கும்.


The caste Hindus among the Village Munsifs, Collectors, Revenue Board and members of other boards practised several deceits. The Congressmen and the caste Hindus and missionaries made a group of this clan stand against itself. They even released a magazine in opposition. Other magazines also attacked vigorously. One of the same clan attempted to humiliate me by getting me arrested on a warrant for my supposed crime of trying to flee the country after committing fraud. This effort failed. In 1896, the ‘Paraiyan’ journal had carried a letter with a libelous fact from some letter-writer. For having published this in the journal, one section of this clan dragged me to court. Many of the clan came to the court in large numbers. They came with their heads and bosoms crowned with the title of ‘Paraiyan’, carrying bundles of money. I was fined Rs. 100. I don’t know who gave that money. They showed openly the love and fidelity for their clan. So the ‘Paraiyan’ journal will remain the root cause for this clan to open its mouth, to progress, to form associations and a society.


இந்த இனத்தவர்கள் அபிவிருத்தியை நாடி நான் லண்டன் நகருக்கு பிர்யானமான்போது பத்திரிகையை நடத்ததக்கவர் கிடையாமல் போனதால் பத்திரிக்கை பிரசுரம் நிருத்தப்பட்டது. பத்திரிகை ஏழு வருடம் தொடர்ந்து நடை பெற்று வந்தது. இந்த இயக்கம் இந்திய முழுமையும் பரவியதால் பல கோடிமக்களும் அபிவிருத்தியடைந்து வருகிறார்கள்.


Seeking the welfare of those of this clan, I had to journey to London and the journal had to be stopped when I could not find anyone suitable to continue publishing it. The journal had functioned continuously for seven years. Since this movement spread throughout India, many crore people continue to benefit from it.


லண்டன் நகருக்குப்போய் தாழ்த்தப்பட்டார் இடுக்கண்களை எடுத்துக் காட்டி பிரிட்டிஷாரின் அனுதாபத்தை நாடி வரவேண்டுமென பம்பாயைச் சேர்ந்தபோது என் தகப்பனாரும் எனக்கு தந்தியனுப்பி திரும்பி வரும்படி கேட்டார்கள். சுடுகாடு போன பிணம் திரும்பாதென்ற தீர்மானத்தோடு மேற்கு திசையை நோக்கி போகும் கப்பல்களில் முதலில் கிடைத்த கப்பலில் பிரயானமாகி கீழ் ஆப்பிரிக்கா ஜான்சிபார் என்னும் தீவு சேர்ந்தேன். அங்கே இரண்டு வருடமிருந்து பணம் சேகரித்துக் கொண்டு தென் ஆபிரிக்கா மார்க்கமாக போனேன். டலகோபே என்னும் துறைமுகத்திளிறங்கி பாஸ் போர்ட்டுக்காக காத்திருந்த ஒரு வாரத்திற்குள் குளிர் ஜூரம் (மலேரியா) கண்டது. கப்பலில் கடல் காற்றில் ஆறு மாதமிருக்கவேண்டும் அல்லது அதிக குளிரான மலைதேசத்தை சேரவேண்டும். இந்தியா திரும்பினால் மரணம் என்றார்கள் டாக்டர்கள்.


When I had reached Bombay with the intent of travelling to London and speaking of the obstacles before the depressed classes and seeking the support of the British, my father sent me a telegram asking me to return. Resolving that the corpse that has gone to the burning ghat cannot return, I journeyed on the first ship that was travelling West and reached the island called Zanzibar in East Africa. I gathered money there for two years before travelling towards South Africa. I alighted at the port of Delagao Bay, and, in the month that I was waiting for my passport, malaria struck. Doctors said that I should stay on a ship to take the sea breeze for six months or go to an extremely cold hilly region. Returning to India would mean death, they said.



நலிப்பட்டிருக்கையில் என் இனத்தவரான ஒரு வண்ணானும் அவர் நல்மனைவியும் எனக்கு வேண்டிய சிகிச்சைசெய்து உபசரித்தார்கள். அங்கிருந்த ஓர் கனதனவானும் என்னை கூட்டிப்போய் உபசரித்தார்கள். அதை விட்டு நெட்டால் மாகாணத்தை சேர்ந்த டர்பன் என்னும் துறைமுகத்தையடைந்தேன். அங்கேயும் அந்தோனி எச். பீட்டர் என்பவர் என்னை உபசரித்து மிக குளிரான மலை பிராந்தியங்களான இடத்திற்கு அனுப்பி சர்க்கார் உத்தியோகத்திலிருக்க உதவினார். இவர்கள் மூவருடைய நன்றியை மறக்க என்னால் முடியவில்லை. நேட்டாளில் வருலமேன்னும் நகரில் முருகன் என்பவர் ஒரு பெரிய பயிர்க்குடியானவராகவும் தனவந்தராகவுமிருந்தார். பிராமணர் யோக்கியம் என்னிடத்தில் தான் அவர் கண்டதாக என்னை வற்புறுத்தி கோதானம் பெறச்செய்து என் ஆசீர்வாதம் கோரினார். ஏழை மக்களுக்கு நான் செய்த நன்றிதெங்கு தன் தலையால் நீர் தருவதுபோலாயிற்று. அந்த தேசத்தில் என் நலிதீர பல வருஷங்களாயின. குடும்ப பாதுகாப்புக்காக நான் என் தாய் தேசம் திரும்பினேன். திரும்பியபோது என் மக்களை கண்டு மகிழ்ந்தாலும் என் இனத்தவர் நிர்பாக்கிய நிலையைக்கான என் மனந்தாளாத தாகுமே.



While I was weakened, one of my race, a washerman and his good wife gave me the treatment and hospitality I needed. An accountant who lived there also gave me hospitality. Leaving that place, I reached the port called Durban in the Natal province. There, too, Antony H. Peter gave me hospitality and sent me to a very cold hilly region and helped me get a government job. I am not able to forget my gratitude to the three of them. In Natal, in the town called Verulam, a soothsayer and a healer said that he could see the fortune of a Brahmin in me and gave me alms and insisted that I bless him. It was as if the good that I had done for poor people was now spouting water from its head. It took many years in that country for my weakness to heal. To protect my family, I had to return to the motherland. When I returned, though I was happy to see my people, my mind was shaken by the unfortunate state of my clan.


சுடுகாடுபோய் திரும்பிய பிணத்திற்குயிருண்டாகி லண்டன் நகரையடுத்து என் நோக்கத்தை கடவுள் நிறைவேற்றுவாரோவென்றெண்ணினேன். சென்னை சேர்ந்தபோது சட்ட சபைக்கு ஒரு அங்கத்தவராக சர்க்கார் நியமித்த சில வருடங்களுக்குள் வட்டமேஜை மகாநாட்டுக்கு தாழ்த்தப்பட்டார்பால் ஓர் பிரதிநிதியாக லண்டன் நகருக்கு என்னை கவர்ன்மெண்டார் அனுப்பினார்கள். அங்கே இரண்டு முறைச்சென்று சென்னை மாகாணத்தில் மாத்திரமல்லாமல் இந்தியா தேச முழுமையுமுள்ள தாழ்த்தப்பட்டாருக்கு வேண்டிய தேசசுதந்திரமும் மற்றுமுரிமைகளையும் அடையச்செயதேன். இருபது வருஷங்களாய் லண்டன்போக நான் கொண்டிருந்த நோக்கம் நிறைவேறியது என் இனத்தவர்கள் பெற்ற பாக்கியமாகும்.


I wondered if, like the corpse that returned from the burning ghat and was brought back to life, god would fulfill my intention of travelling to London. When I reached Chennai, I was appointed as a member of the Legislative Assemby by the Government. Within a few years, I was sent as a representative of the depressed classes to the Round Table Conference in London by the government. I went there twice. I helped people, not only in Madras Presidency, but all over India attain national freedom and win their rights. Twenty years on, it was a boon to my clan that my intention to travel to London was fulfilled.





இந்த புத்தகத்தின் பதிப்புரை இங்கே, எழுத்தாளரின் முகவுரையும, அரசாங்கத்தார் அபிப்பிராயம் என்னும் அத்தியாயம் இங்கே. ஜீவிய சரித்திர சுருக்கம் இங்கே துவங்குகிறது. அதற்கடுத்து வரும் செய்திகள் – பறையன் பத்திரிக்கையைப் பற்றியும், லண்டன் பயணத்தைப் பற்றியும் உள்ள பகுதிகள் இங்கே



The publisher’s preface to the book is here, the author’s preface and the chapter titled the ‘Government’s Opinion’ is here. The brief autobiography begins here. The next part about the Paraiyan journal and the travel to London is here.


சமூகம்


Society


ஆரியர்கள் நமது தேசத்தில் குடியேறிவந்து ஜாதி கோட்பாடுகள் உண்டாக்கியபோது இப்போது பறையர், பஞ்சமர், ஆதி திராவிடர்களேன்னும் திராவிடர்கள் இசையாமல் பல துன்பங்களுக்குட்பட்டுகொண்டு தனியே சேரி என்னும் தங்கள் கிராமங்களையுன்டாக்கி கோயில், குளம், குரு, கிராம தலைவர் (நாட்டாண்மைக்காரர்), பஞ்சாயத்தார், வண்ணான், அம்பட்டன், சுடுகாடு, இடுகாடு, விதவாவிவாகம், விவாக சம்மந்த விலக்கு முதலியவையுடன் கிராமங்களில் தனி சமூகமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தேசாயி செட்டி என்போர் இவர்களுக்குள்ளுண்டாகும் வழக்கை தீர்ப்பதாக பணம் பறித்து போகும் வழக்கம் ஒழிந்துவருகிறது. நான் கண்டித்து வந்திருக்கிறேன். இவர்கள் வெளிப்படையாய் வந்து தங்கள் சுதந்திரங்களை பாராட்டாமல் ஆரியர் ஜாதி கோட்பாட்டுக்குள்ளானவர்கள். இவர்களை யடக்கி வைத்து வந்தார்கள். இவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு அனுபவிக்கும்படி பெரியதோர் சமூகமாக சேர்க்க முயன்றேன். பத்திரிகையில் வெளியான விஷயங்களையுணர்ந்த இவ்வினத்தவர் தேசமெங்கும் கூட்டங்கள் கூடி தங்களுக்கிருக்கும் இடுக்கண்களைப்பற்றியும் தங்கள் அபிவிருத்தியைப்பற்றியும் பேசி வந்தார்கள். சென்னையில் ‘பறையர்’ மகா ஜனசபை என்ற தலைமைசபை யொன்று ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு நானே காரியதரிசியாகவிருந்து நடத்தி வந்தேன்.


When the Aryans settled in our country and created the rules of caste, the Dravidians – who are now called Paraiyar, Panjamar and Adi Dravidar – were subject to much misery for they refused to concede. They lived as a separate society, in a separate space called the Cheri. They created their villages with such things as their temple, pond, priest, village head, panchayat members, washerman, barber, burial ground, burning ghat, and the customs of widow remarriage and divorce. The custom of the Thesaayi Chetti, who would come under the guise of resolving their disputes, snatch their money and leave, is now vanishing. I continue to condemn this practice. Instead of openly celebrating their freedom, they have been absorbed into the Aryan caste rules. Those people have kept them under control. I tried to collect them into a large community, that they may ask for and enjoy their rights. Reading and understanding all that was published in the journal, people of this clan gathered in groups across the nation to talk about the obstacles they faced and their development. In Chennai, a central group called the ‘Paraiyar’ Mahajana Sabha was established. I was the Secretary who led this group.


1895-ம் வருஷத்தில் ஓர் சம்பவம் நேரிட்டது. அதாவது லண்டன் நகரில் சிவில் சர்வீஸ் பரிக்ஷை நடந்து கொண்டிருந்தது. அந்த பரிக்ஷையில் தேருகிறவர்கள் ஆங்கிலேயரே. அவர்கள் தான் கலெக்டர்களாகவும் ஜட்ஜிகளாகவும் இன்னும் தேசபரிபாலனத்தில் உத்திரவாதமான உயர்ந்த பதவிகளினின்று தேச பரிபாலனஞ் செய்து கொண்டுவந்தார்கள். அந்த பரீக்ஷை இந்தியாவிலும் நடைபெற வேண்டுமென பிரிட்டிஷ் பார்லிமெண்டில் காங்கிரஸ்காரர்கள் ஓர் மசோதா சமர்பித்தார்கள். அந்த பரீக்ஷையானது இந்தியாவிலும் நடந்தால் ஜாதி இந்துக்கள் உயர்தர உத்தியோகங்களை வகித்து ஏழை ஜாதியானவர்களைத் தீண்டாதார் என்று இம்சிப்பார்களென பறையர் மகா ஜன சபையார் சென்னை வெசிலியன் மிஷன் காலேஜ் ஆலில் 1893 டிசம்பர் 23 தேதி ஒரு பெருங்கூட்டம் கூடி அந்த மசோதாவை எதிர் மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப்பங்கள் சேகரித்து ஜெனரல் சர் ஜார்ஜ் செஸ்னி (Genl. Sir Geo. Chesney) என்னும் பார்லிமெண்டு மெம்பரைக் கொண்டு சமர்பித்தார்கள். அதைக்கண்ட காங்கிரஸ்காரர் தங்கள் மனுவை பின்னித்துக் கொண்டார்கள். அதின்பின் கீழ்தர உத்தியோகங்களிலிருந்து மேல்தர உத்தியோகத்தை வகிக்க யோக்கியதையுள்ளவர்களை நியமிக்கலாமென இந்திய செக்ரடரியார் உத்தரவளித்தார். எதிர் மறுப்பு மனு அனுபந்தம் 1-ல் காண்க.


In 1895, an incident took place. The Civil Services exams were on in London. Only the English would pass those exams. Only they could become Collectors and Judges and hold other high offices to perform tasks of national administration. Members of the Congress submitted a petition to the British Parliament that these exams should be conducted in India also. The Paraiyar Mahajana Sabha gathered as a large crowd at the Chennai Wesleyan Mission College Hall on December 23, 1893, to collect signatures opposing this petition, saying that if those exams were held in India too, the caste Hindus would corner all the high-ranking posts and would torture the poor castes by terming them untouchable. The opposing petition was 112 feet long with 3412 signatures and was submitted to the British Parliament through the Parliament member called General Sir George Chesney. Seeing this, the Congressmen withdrew their petition. After this, the India Secretary issued orders that all those in lower posts can be appointed to higher postings if they have the requisite capacity. (Look at appendix 1 to see the opposing petition)


இந்த புத்தகத்தின் பதிப்புரை இங்கே, எழுத்தாளரின் முகவுரையும, அரசாங்கத்தார் அபிப்பிராயம் என்னும் அத்தியாயம் இங்கே. ஜீவிய சரித்திர சுருக்கம் இங்கே துவங்குகிறது. அதற்கடுத்து வரும் செய்திகள் – பறையன் பத்திரிக்கையைப் பற்றியும், லண்டன் பயணத்தைப் பற்றியும் உள்ள பகுதிகள் இங்கே, அதன் பின் வரும் பகுதியில், சாதி வேறுபாடின் துவக்கமும், காங்கிரஸ்காரர் சிவில் சர்வீஸ் பரிக்ஷை இந்தியாவில் நடத்தவேண்டும் என்ற விண்ணப்பத்திற்கு எதிரே புறப்பட்ட மனுவைப் பற்றியும்.


The publisher’s preface to the book is here, the author’s preface and the chapter titled the ‘Government’s Opinion’ is here. The brief autobiography begins here. The next part about the Paraiyan journal and the travel to London is here, which is followed by the section on the origin of caste and the birth of a petition against the Congress demand to hold the Civil Services exam in India.


கிராமங்களில் இவ்வின குடியானவர்கள் நிலைமையை திட்டமாய் குறித்ததோடு சென்னை நகரத்திலுங்கூட மயிலாப்பூரில் ஐகோர்ட்டு ஜட்ஜீயாகவிருந்த ஓர் இந்தியர் வீட்டுக்குச் சமீபமாயுள்ள பிராமணர் தெருவில் ‘பறையர் உள்ளே வரக்கூடாது’ என்ற விளம்பர பலகையொன்று இருப்பதாகவும், ஜாதி இந்துக்கள் ஸ்தாபித்திருக்கும் ‘பச்சையப்பான்’ கலாசாலையில் இவ்வினத்து பிள்ளைகளை சேர்ப்பதில்ல்லை என்றும் மனுவில் கண்டிருந்தது. அந்த பலகை எடுப்பட்டு போகவும், கலாசாலையில் பிள்ளைகளைச் சிலகாலத்திற்கு பிறகு சேர்க்கவும் இம்மனுவே காரணம்.


Besides noting the state of these people in the villages, the petition had mentioned that there was a board saying ‘Paraiyar should not enter’ in a Brahmin street in Mylapore, near the house of an Indian High Court Judge, and that the children of this clan were not admitted to the Pachaiyappan College, established by caste Hindus here in Chennai city. This petition was the reason why that board was removed and these children were admitted a little while later.


லேபர் கமிஷனர் ஸ்தாபிதம்.
மேற்கண்ட மனுவால் ஏற்பட்டது.


The appointment of the Labour Commissioner.
Was due to the above-mentioned petition.


மனு பிரதிகள் பார்லிமெண்டு மெம்பர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டன. இதனால் ஜாதி இந்துக்கள் குரூரமாய் பல கோடிகணக்கான உழவு தொழில் செய்யும் உழைப்பாளிகளை நடத்துவதைப் பற்றி இங்கிலாந்திலுள்ள எல்லா பத்திரிகைகளும் பிரஸ்தாபம் செய்தன. இவ்வித கொடுமை இந்தியாவில் வியாபித்திருக்க இந்தியா கவர்ன்மெண்டார் எப்படி அதை கவனியாதிருக்ககூடுமென்ற கிளர்ச்சியும் ஏற்பட்டு இந்தியா கவர்ன்மெண்டார் நடவடிக்கை எடுத்துக்கொள்ளவேண்டுமென இந்தியா செக்றேடேரியார் வற்புறுத்தியதின் பயனாக இந்தியா கவர்ன்மெண்டார் சென்னை கவர்ந்மேண்டாரோடு ஆலோசிக்க தொடங்கினார்கள். இப்படி பல வருஷங்கள் சென்றபிறகு ஒடுக்கப்பட்டாரை கல்வியிலும் பொருளாதாரத்திலும் விருத்திக்கு கொண்டுவரும்படி சிவில் சர்வீஸ் உத்தியோகஸ்தர்களில் வயதிலும் உத்தியோகத்திலும் மூத்தவரும் அனுபோகமுள்ளவருமான ஒருவரை இரக்ஷகராக (Protector) நியமித்து அவருக்கு ஒரு ஸ்தாபிதம் கொடுத்து இந்த ஒடுக்கப்பட்டாரை முன்னேற்றம்செய்ய தீர்மானித்தார்கள். அதுமுதல் பள்ளிக்கூடங்கள், குடியிருப்பு மனைகள், விவசாய நிலம் முதலியவைகளை ஒடுக்கப்பட்டார் பெற்று வருகிறார்கள். இவ்வினத்தவர் விருத்திக்காக ஏற்படுத்திய இரக்ஷகரும் அவர் ஸ்தாபிதமும் கைதொழிலாளரையும் கவனிக்கவேண்டுமென ஏற்பட்டபோது லேபர் கமிஷனர் என்று அவர் அழைக்கப்பட்டு வருகிறார்.


Copies of the petition were given to all members of Parliament. All the newspapers of England published how cruelly caste Hindus treated many crores of agricultural labourers. There was a stir about how the Indian government could have not noticed the practice of such cruelties. As the Indian Secretary compelled the Indian Government to take action, Indian government officials began to hold discussions with the Chennai government officials. Many years later, they decided to encourage the advancement of these oppressed people by appointing the most senior by virtue of age and posting from among the Civil Service officers, one who was also compassionate, as Protector. Henceforth, these oppressed people have received schools, houses and agricultural land. When it came to pass that the Protector who was instituted for the welfare of these people also had to look after the artisans, he began to be called the Labour Commissioner.


செங்கல்பட்டு ஜில்லாவில் தற்காஸ்து நிலம் இவ்வினத்தவருக்கு கொடுக்கபடவேண்டுமென கவர்ந்மேண்டாரைக் கோரியிருந்தேன். அந்த ஜில்லாவில் இவர்களுக்கு கொடுக்க ஒரு ஏக்கரா நிலமும் கிடையாதென்று தெரிவித்தார்கள். 1894 ஏப்ரல் 28 கிருஷ்ணா ஜில்லாவில் வேண்டிய நிலமிருப்பதாக கலெக்டர் அட்கின்சந்துரை தெரிவித்தார். பண உதவியில்லாமல் அவ்வளவு தூரம்போய் ஏழைகள் விவசாயம் செய்யக்கூடாமல் போயிற்று. இப்போது ஆயிரக்கணக்கான ஏக்கரா நிலம் கொடுத்துவருவதுமின்றி ஆதி திராவிட ஏழை விவசாயிகள் நேராய் கலெக்டருக்கு தற்காஸ்து கொடுத்து நிலம் பெறுவதை காண்கிறோம். கல்வி விஷயத்திலும் லேபர் கமிஷனர் செய்துவரும் உதவிகள் பல. தற்போது கவர்ன்மெண்டார் இவர்களுக்கு செய்துவரும் அநுக்கிரகங் களானது சிவில் சர்வீஸ் பரிக்ஷையை பறையர் மகாஜன சபையார் மறுத்ததினால் தீண்டாதார் என்போர் படுங் கடுங்கொடுமை வெளிப்பட்டதனாலன்றோ? நான் இந்தியாவில் இல்லா காலத்திலும் பறையர் மகாஜன சபையார் ஏகொபித்தும் தனிதனி அங்கத்தினர்களாகவும் அரும் பிரயாசம் செய்து வந்திருக்கின்றார்கள். இப்போதும் இனஞ்சேரா சிலரைக் காண்கிறேன்.


I had petitioned the government to give land that was available on tender for these people in the Chengalpet Zilla. They said that there was not even one acre of land to give in that Zilla. On April 28, 1894, Collector Atkinson announced that there was enough land in the Krishna Zilla. The poor were unable to cultivate that land or travel that distance without monetary assistance. Now, we see poor Adi Dravida farmers taking lands on tender straight from the Collector, besides the many thousands of acres of land that he gives. In the matter of education, too, the Labour Commissioner is helping us in many ways. The assistance that the government is now providing to these people was the result of the opposition of the Paraiyar Mahajana Sabha to the Civil Services exam. Was this not how the terrible cruelty of untouchability was made public? Even in the time when I was not in India, the Paraiyar Mahajana Sabha was, together and as individual members, working very hard. Yet I still see a few people who do not join the clan.



மிகவும் நன்றி தோழர். மலர்விழி : http://writingcaste.wordpress.com/2011/08/




























Tuesday, May 3, 2011

தலித் வரலாற்று மாதம்


Dalit History Month

Black Americans have protested the slavery and racism thrust on them
by the Whites through many forums including those of Black literature
and politics. One such forum is Black History Month. They announced
and celebrate February as Black History Month to redeem their racial
history that has been side-lined so far. February is an important
month in Black history - This is the month that people like Frederick
Douglass, Abraham Lincoln and W.E.B. Du Bois, who fought against the
system of slavery, were born. The big corporate houses and the
American government also celebrate Black History Month. Stamps to
honour leading members of the Black community are issued in this time.

Using the celebrations of Black History Month as an example, Dalits
announced and celebrate April as Dalit History Month to redeem the
history of the struggles for social emancipation and political service
of Dalit leaders who have been ignored and deliberately forgotten, to
write about this history and take it to the people through various
media. Towards redeeming for research the histories that were hidden,
twisted and re-written vengefully by the Brahmin and middle-castes,
pamphlets and books are published and conferences organised as part of
the Dalit History Month celebrations every April. It is most
appropriate to observe this in April, the month that the revolutionary
Ambedkar was born. He remains the most important symbol for Dalit
people in the struggle against untouchability and caste.

Tamil Dalit history can be told from the 18th century. However, there
are printed documents available only from the 19th century onwards. It
is necessary that we unearth the organisations and revolutions of and
obstacles in the path of Dalit leaders creating ideas for social
emancipation, inaugurating the Dravidian Sangam and thinking about
such things as resistance to Vedic religion, rejecting the culture of
the Hindi speakers, self-respect, and Tamil language pride in 19th-
century Tamil Nadu. The mistaken idea that untouchability and slavery
have been the history of the Dalit people has become ingrained in
common sense. Untouchability was imposed on Dalits only for a few
centuries. The celebration of Dalit History Month will also help to
write scientifically-sound answers to such questions as: Why was
untouchability thrust upon Dalits? How were the untouchable castes
formed?

We must celebrate every April as Dalit History Month to bring into
history the unknown documents and speeches of Dalit leaders, in a way
that will impact society at large.

Many power structures and traditions work to increase or decrease
income inequalities and exploitation through culture. Yet in India,
caste is a power structure that enables suppression and exploitation.
Unless this structure is removed from the root, there will be no
opportunity for equality, social justice and humanitarianism to
flourish here.No cultured society can accept the social evil of
untouchability. This Dalit History Month will provide an opportunity
to discuss in public spaces the everyday violence that Dalits face and
resist.

In the struggle to reclaim the rights of the Black people, Whites
gathered with humility under Black leadership. Can we expect the same
from the daily enforcers of untouchability - the dominant castes - in
the struggle to abolish untouchability?

Paari. chelian

மிகவும் நன்றி தோழர் மலர்விழி

Thursday, March 10, 2011

வரலாற்று மோசடி







வரலாற்று மோசடி

பாரி. செழியன்.






. சனவரி 25 மொழிப்போர் தியாகிகள் 'வீரவணக்கம்' நாள், வழக்கம் போலவே எவ்வித செயல்திட்டம், அறிவிப்புகள் ஏதுமின்றி ஒரு சடங்காகவே இவ்வாண்டும் அனுசரிக்கப்பட்டது. தமிழக முதல்வர் முதல் திராவிட, தமிழ்த்தேசிய, தோழர்கள் வரை 1965 வருடம் அதாவது நான்காம் மொழிப்போராட்டம் பற்றியே பேசினார்கள். எந்த ஒரு போராட்டத்திலும் முதலில் களப்பலியானவரின் நினைவைப் போற்றுவதே இயல்பு. 1938 ஆம் ஆண்டு நடந்த முதல் இந்தி எதிர்ப்போரில் தமிழுக்காக முதன்முதலாக உயிரைத் தந்த சனவரி 15 நாளையே மொழிப்போர் தியாகிகள் நாளாக அறிவிக்க வேண்டும் அதுதான் பொருள்பொதிந்தது. அதற்கு மாறாக முப்பது ஆண்டுகளுக்குப் பின் 1965 ஆண்டு சனவரி முதல் மார்ச் வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டதில் பலர் உயிர்த் தியாகம் செய்த நாளையே சனவரி 25 நளையே 'மொழிப் போர் தியாகி நாளாக அறிவித்துக் கொண்டாடுவது, முதல் மொழிப்போரில் தமிழுக்காக உயிர் தியாகம் செய்தது முக்கியத்துவமில்லாமல் இன்றும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது

1937 ல் நடைபெற்ற சென்னை மாகான பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி தோற்றது. அத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சி இந்தி திணிப்பைத் தன்னுடைய கொள்கையாக கொண்டிருந்தது. சென்னை மாகானத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி மொழியைக் கட்டாயப்பாடமாக வைக்கபோவதாக முதலைமைச்சர் இராசகோபாலாச்சாரி அறிவித்தார். இந்தி மொழியை நம் மாணவர்களுக்கு பாடமாக வைத்தால் நம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு கேடு வரும், அதோடு நம்முடைய பண்பாடு,கலாச்சாரம் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த தமிழர்கள் கூட்டங்கூட்டமாக அணிதிரண்டு, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள். இதுதான் முதல் இந்தி எதிர்ப்போராட்டம் இதுவரையில் ஏழு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இன்றும் அது முடியவிலை.

1. முதலாம் மொழிப்போராட்டம் - 1937 - 1940

2 இரண்டாம் மொழிப்போராட்டம் - 1948 - 1950

3 மூன்றாம் மொழிப்போராட்டம் - 1952
4 நான்காம் மொழிப்போராட்டம் - 1963 - 1965
5 ஐந்தாம் மொழிப் போராட்டம் - 1967 - 1968
6 ஆறாம் மொழிப் போராட்டம் - 1986 - 1987
7 ஏழாம் மொழிப் போராட்டம் - 1993 - 1994.
திராவிட இயக்கங்கள் உருவாகத காலம். மக்களின் தமிழ் மொழி உணர்வை, இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வை ஒருங்கிணைத்து வ்ழிநடத்திச் சென்றவை தமிழ் அமைப்புகளே. கரந்தைத் தமிழ்சங்கம், திருவையாற்றுச் செந்தமிழ்கழகம், உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவை, நாமக்கல் தமிழ்ச் சங்கம், தென்காசி திருவள்ளுவர் கழகம், நெல்லைத் தமிழ்ப் பாதுகாப்பு சங்கம்..... போன்ற தமிழ் அமைப்புகளும், வேங்கடாசலம், உமாககேசுவரனார், சோமசுந்தர பாரதியார்,, கா.சுப்பிரமணியம், கு மு அண்ணல் தாங்கோ போன்ற தமிழறிஞர்கள் தலைமையேற்று நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள், சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களின் விளைவாக தமிழகம் முழுவதும்(ஆந்திரா,கேரளா,கர்நாடகம் உள்ளடக்கிய சென்னை மாகானம் என்றாலும் அங்கெல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறவில்லை) தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் குறிப்பாக தொல் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் இந்தியெதிர்ப்பு போர் கொழுந்துவிட்டு எரிந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களி மிக அதிகமாக தொல் தமிழர்கள் கல்ந்துகொண்டு சிறை சென்றனர். அதை " சிறையில் ஒழுங்காக சாப்பாடு கிடைக்கும் என்பதால் பல ஹரிசனங்கள் கைதாகியுள்ளார்கள்" என்று டாக்டர் சுப்புராயன் சட்டமன்றதில் தொல் தமிழர்களின் தமிழுணர்வை பகடி செய்தார். இதையே " அற்பக்கூலிகளுக்கு அமர்த்தப்பட்ட கூலிகள்" என முதலைமச்சர் இராசாசி கேவலப்படுத்தினார். இந்த முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழுக்காக முதன்முதலில் 15.01.1939 ல் தன்னுயிரை ஈகம் செய்தவர் எசு.நடராசன் என்ற தொல் தமிழர். அவருக்கு அடுத்தே மூன்று மாதங்களுக்கு பின்னர் இடை நிலைச்சாதியைச் சேர்ந்த தாளமுத்து 11.03.1939 ல் உயிர்த்தியாகம் செய்தார். ஆனால் வரலாற்று ஏடுகளில் பெயர்ச்சூட்டலில்' தாள்முத்து நடராசன்" என்று தாளமுத்து முன்பாகவும் நடராசன் இரண்டாவது இடத்திற்கு ஒதுக்கியது. அதை உண்மையாக்கும் பொருட்டு அரசு மாளிகையொன்றிற்கு 'தாளமுத்து நடராசன் மாளிகை' என பிழையான வரிசையில் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.

சென்னை வள்ளலார் நகரையடுத்த மூலக்கொத்தளம் சுடுகாட்டில் இருக்கும் நினைவுச்சின்னத்தில் 'நடராசன் தாளமுத்து' என்று சரியான வரிசையில் எழுதப்பட்டுள்ளது. இந்த சரியான பெயர் வரிசை 1960 வரையில் சரியாக உச்சரிக்கப்பட்டு வந்துள்ளது. 1952 களில் ஆதிதிராவிடர் நலவுரிமைஸ் சங்கம் சார்பாக திறக்கப்பட்ட 'நடராசன் தாளமுத்து' நூல் நிலையத் திறப்பு விழா அழைப்பிதழில் 'நடராசன் தாளமுத்து' நூல் நிலையத்தை, சினிமா நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன், கலைஞர் மு.கருனாநிதி, டைரக்டர் கிருஷ்ணன்பஞ்சு அகியோர் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்கள். அதே கலைஞர் மு கருனாநிதிதான் வரலாற்று உண்மையை மாற்றிப்போட்டு 'தாளமுத்து நடராசன்' என்று உச்சரிக்கிறார். அரசு மாளிகை ஒன்றிற்கு அப்படியே பெயர் சூட்டி வராற்று மோசடி செய்கிறார்.









தமிழ்மொழி காக்க உயிர்விட்ட நடராசன் பிணத்தை,மரணத்தை வைத்துதான் தமிழ்மொழி உணர்ச்சியை உசுப்பிவிட்டார்கள். " நடராசன் அவர் குடியில் ஒரே பிள்ளை. நம் மகன் சிறையிலிருந்து வருவான் அவனுக்கு திருமணம் செய்வோம் என் எண்ணிய நடராசன் பெற்றோர் ஏமாற்றமுற்றதையும் வருத்தமாகக் கூறி மணக்கோலத்தில் போக இருந்த நடராசன் அநியாயமாகப் பிணக்கோலத்தில் சென்று விட்டாரே" என்று நடராசன் இறுதி நிகழ்ச்சியில் கு.மு.அண்ணல்தங்கோ அவர்கள் உருக்கமாக பேசியுள்ளார்.ஆற்றல் மிக்க பேச்சாளர் முன்னால் முதல்வர் சி..அண்ணாத்துரை அவர்கள் " அதோ, அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவருடைய இரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால் அவருடைய முகத்தைப் பாருங்கள் தன்னுடைய கலாச்சாரத்திற்காவும், விடுதலைக்காகவும் போராடி, அப்போடிரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம். பல்லாயிரக்கணக்கில் கூடிய நீங்கள், ஓர் உறுதி மொழியினைத் தருவீர்களா? நாம் விரும்பாத ஒரு மொழியினை எதிர்த்துப் போரிட்டு, ஐயகோ! நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்ற உறுதி கொள்வீர்களா?. இந்தியைப் புகுத்துவதால் நம் மொழி தமிழுக்கு குந்தகம் விளைந்திடுமா? என யாராவது கேட்டால் அவரிடம் கூறுங்கள். இந்தி வந்தது அதனை நுழையவிடாமல் தடுக்கும் போராட்டத்தில் ஒரு தமிழன் உயிர்துறந்தான்". என்று அண்ணத்துரையின் இந்த உணர்ச்சிப் பேச்சு தமிழருக்கு தமிழ் மொழியுணர்ச்சியை உசுப்பிவிட்டது.அந்த மொழியுணர்ச்சியே அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது. ஆனால் திமுக அமைத்த மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் நடராசனின் படம் கடைக்கோடியில்.

தமிழ்மொழிக்காக உயிர் விட்ட நடராசனின் மரணம் குறித்து விளக்கம் தந்த முதலமைச்சர் ராசாசி, " நடராசன் படிபறிவில்லாதவர், அதனால்தான் அவர் மறியலில் ஈடுபட்டார். அவரைப்போல படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்" என்றார், அதற்கு கடுமையான கண்டனம் எழுந்தது. நடராசனின் தந்தையார் முதல்வர் ராசாசியின் விளக்கத்தை மறுத்து, " இந்தி எதிர்ப்பிற்காக மறியலில் ஈடுபட்டு நடராசன் கைதானபோது அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்துவிடுகிறோம்" என அரசு அதிகாரிகள் அவரிடம் வற்புறுத்தியுள்ளீர்கள். ஆனால் " கோழையாக வாழ்வதைவிட வீரனாக சாவதைதே நான் விரும்புகிறேன்" என நடராசன் கூறியுள்ளார். அப்படியயே வீரமரணமும் ஏய்துவிட்டார்.














தமிழ்மொழி உணர்வை மூலதனமாக்கி ஆட்சியில் அமர்ந்த திராவிடக் கட்சிகள். தமிழுக்காக இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் விட்ட நடராசனை இருட்டடிப்புச் செய்துததுமட்டுமல்ல வரலாற்றுக்கு நேர்மையில்லாமல் மோசடி செய்கிறது. திராவிட கட்சிகள் மட்டுமல்ல, தமிழ்த்தேசிய அமைப்புகள், சாதி ஒழிப்பு, சமூக நீதி, மைக் தொழிளாலர்கள், எல்லாமே தாளமுத்து நடராசன் என்றே பதிவு செய்கின்றன. 26.01.2011 ஜு வி யில் சீமான் எழுதும் தொடரில் நடராசனை மட்டும் தனித்து ஒதுக்கிமறைத்துவிட்டு மற்ற அனைவரையும் மொழிப்போர் தியகிகளென படம் காட்டுகிறார். அடிப்படை தமிழக வரலாறு கூட தெரியாத இதெல்லாம் தமிழகத்தை ஆளனுமாம். தமிழியம் பறம்பை அறிவன் அவர்கள் வழங்கிய 'தமிழிய வரலாற்றுப் பேரவை' யின் நாள்காட்டியில் தமிழர்களின் முக்கிய நாள்கள் என்கிற தலைப்பில் ' மார்ச் 14 - தாளமுத்து நடராசன் தோற்றம் ' என குறிப்பிட்டுள்ளது. இதில் என்ன பொருள் இருகிறது? தலித்களின் நண்பர் என்று சொல்லிக்கொண்டே தலித்களின் ஆளுமைகளை, வரலாற்றை திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்வதை எந்த நடுநிலையாளர்களும் கேள்வி கேட்பதில்லை. சாதியடிப்படையில் ஒருவரின் உயிர் தியாகததை இழிவு படுத்தமுடியுமா? இவர்கள் பேசும் சாதி ஒழிப்பு, சமூக நீதி... எந்தளவிற்கு நம்பகத்தன்மையானதாக இருக்கும்?

இன்னும் விரிவாக அறிய
1 என்று முடியும் இந்த மொழிப்போர் - 1994- . இராமசாமி
2 திரவிட இயக்கமும் மொழிக்கொள்கையும் - 1991-கோ.கேசவன்
3 அறவுவாழி - ஏப்பிரல் - 1999
4 தூய தமிழ்க் காவலன் கு மு அண்ணல்தங்கோ - 1999
5 The Political Career of E.V.Ramasami Nicker -1983 - Dr.E.Sa.Visswanathan
( Translated by Prof. P.S. Panneer Selvam)
6
மொழிப் போர் தீண்டப்படாத தியாகம் - 2005 - இரவிக்குமார்
7 பெரியார்: தமிழ், தமிழர், தமிழ்நாடு - 2007 - தொல்தமிழன்