Monday, February 21, 2011

இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தை மீறும்போதெல்லாம்

இடைநிலை சாதிவெறியர்களால் தாக்கி, கொளுத்தப்பட்ட பரளிபுதூர் தலித் குடியிருப்புகளை பார்த்துவந்தேன்.அதிர்ந்து போனேன். மிகப்பெரிய கொடூரம் நடந்திருகிறது. பல வீடுகள் தீக்கரையாயின. துணிமணிகள்,வீட்டு பொருட்கள், மாணவர்கள் புத்தக பைகள்.. தீ வைத்து கொளுத்தப்பட்டன. வாய் வயிற்றை கட்டி சேர்த்து வைத்திருந்த நகைகள் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. ஆடுமாடுகள் களவு போயின. அரசாங்கம் கொடுத்த இலவச T Vகள் குறிவைத்து அணைத்து வீட்டிலும் நொறுக்கப்பட்டுள்ளது.

இன்னமும் இடைநிளைசாதிகளின் சொல்படிதான் நடக்க வேண்டும் மீறும்போது இதுபோல தாக்குதல்கள் தொடர்கின்றன. இதுவரை எந்த ஓட்டு போரிக்கிலும் வந்து பார்க்கவில்லை

சாதி ஒழிப்பு பற்றி பேசும் இடைநிலை சாதி அறிவுஜீவிகள். தங்கள் சொந்த சாதி மக்களிடம் அம்பேத்கார் பற்றியோ அவருடைய சாதி ஒழிப்பு கருத்துகளை பற்றி பேச மாட்டார்கள். ஆனால் தலித் மக்களிடம், தலித் மேடைகளில் மட்டுமே தலித்தல்லாத தலைவர்களின் வாயுபசார, வெற்று சவுடாலை நுரைதள்ள பேசுவார்கள். அவருதான் தீண்டாமையை ஒழிசாறு, அவருதான் சாதிய வேர் புடுங்க புடிங்கினாருனு பேசுவானுங்க. அந்த பேச்சில் இருந்த நம்பக தன்மையை ஆராயமாட்டாத சுயசாதி வெறியனுங்க.இதையும் நம்பி அவர்கள் பின்னால் போகும் நம் அறிவிலிகள்.

அம்பேத்கார் சொன்னார், "அரசியல் அதிகாரத்தை நாம் கைப்பற்றினால் ஒழிய நம்முடைய சிக்கலுக்கு தீர்வில்லை", என்றார். ஆக தலித்கள் அரசியல்அதிகாரம் பெறவேண்டும் என்று விரும்பியவர் யார் ? என்று யோசிக்கும்போது புரட்சியாளர் அம்பேத்கார் தவிர வேறு யாருமில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.பல தலித்தல்லாத தலைவர்களை வலிய நம்மீது திணித்து நம் ஒற்றுமையை குலைகிராறாக்கள். அரசியல் அதிகாரம் பெற்று விடக்கூடாது என்பதில் கவனமாக செயல்படுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இடைநிலை சாதி வெறியர்களின் கொடிய தாக்குதலுக்கு ஆளான வறிய மக்களுக்கு ஆறுதல் சொல்ல இன்றும் சென்றேன். ஆயுதம் இல்லாத இவர்களை ஒரு பெரிய கும்பலே பேடித்தனமாக கண்மூடித்தனமாக தாக்கி அவர்கள் குடிசைகளுக்கு தீவைத்து கொளுத்திவிட்டு இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா ? என்று கோசம் போட்டு சென்றார்களாம்.ஈழத்தில் நடக்கிற கொடுமையை கண்டிகிறவர்கள் சொந்த மண்ணிலே ..தான் பிறந்த கிராமத்திலே, வீட்லே சக தமிழர்களாலேயே கொளுத்ப்படுவதை எவனும் இதுவரை கண்டிக்கவில்லை.

திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டுபோடும் இவர்கள் துயரம் அவர்களுக்கு தெரியவில்லை. பொதுமை பேசும் அதுகளும் அப்படிதான். சாதி ஒழிப்பு குறித்து அவர் அப்படி சொன்னார் இவர் இப்படி சொன்னார் என்று

சொல்லும் வெற்று வாயுப்பசார வாதிகளும். வாயையும் ... பொத்திக்கிகொண்டார்கள். இடைநிலை சாதி அரசாங்கம் வீடுகளை கொளுத்தியவன் மயிரைக்கூட பிடிக்கமுடியவில்லை. அவர்களை இன்னும் கைது செய்ய வில்லை

தலித்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்

தலித் தலைமையை ஆதரிக்க வேண்டும்

தலித் வரலாற்றை பரப்பவேண்டும்

தாலிகளின் சாமூக இழிவுகளை தீண்டாமை கொடுமையை நீக்குகிற வகையில் இடைநிலை சாதிகளால் ஒரு நல்ல அரசாங்கத்தை வழிநடத்த முடியாது.

௧) இடைநிலை சாதிகள் வழக்கம்போல எப்போதுமே தலித்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி தங்கள் கட்டுபாட்டுக்குள் வைப்பதை எதிர்கும்போதெல்லம் இப்படி ஒரு கொடூரமான தாகுதலை நிகழ்த்துவார்கள்.

அதாவது இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தை மீறும்போதெல்லாம் இப்படி தலித்கள் மீது தாக்குதல் தொடரும்.

௨) இடைநிலை சாதிகள் தங்களுடைய அரசியல் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைத்துகொள்ளவும்

தலித்கள் தங்களுக்கான அரசியல் அமைப்பை ஆதரிக்குபோதேல்லாம். குடிசைகள் கொளுத்தப்படும்

௩) இடைநிலை சாதிகள் தொடர்ந்து தலித்களை வழி நடத்துவார்கள் அதை எதிர்கும்போதேல்லாம்

இவைதான் தலித்கள் மீது தாகுதல் நடத்த அடிப்படை காரணங்கள் மற்றவை எல்லாமே ஜோடிக்கபட்டவையே. கொடி பிரச்னை என்பது வெற்று காரணம். உன் கொடியை நீ கழற்றிவிடு என் கொடியை நான் கழற்றிவிடுவேன் என முடிவெடுத்து முடிந்த பிரச்னை.

ஏன் தலித்கள் தங்களுக்கு பிடித்த அரசியல் கொடியை ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றக்கூடாதா ? அதுவல்ல பிரச்னை

தலித்கள் தங்களுக்கான அரசியல் அமைப்புகளை உருவாக்கி அரசியல் அதிகாரம் பெற்றுவிடுவார்கள் என்கிற அச்சமே. தீண்டாமை, சாதி ஒழிப்பு பற்றி பேசிய எந்த இடைநிலை சாதி தலைவன் எவனும் தலித்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்று பாடுபட வில்லை ஏன் பேசகூட இல்லையே. குறைந்த பட்சம் சாதி ஒழிந்த சமூகம் அமைப்பதற்கு எந்த செயல்திட்டமும் முன் வைக்கவில்லை என்பதுதானே உண்மை.மேடைகளில் வெற்று வாயுபச்சரமே!!.Their service only lip sympathy to dalits


No comments:

Post a Comment