அயோத்திதாசப்பண்டிதர் இணைய தள அறிமுக விழா
http://www.ayothidhasar.com/
தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆதித்தமிழர்கள், சாதியற்ற திராவிடர்களின் உரிமைப்பற்றி பேசி, வேத பிராமணீயத்தை எதிர்த்து, தீண்டாமை, சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, அரசியல் பிரதிநித்துவம் , தமிழ்மொழி உணர்வு , பெண்கல்வி... போன்ற நவீன கருத்தாக்கங்களை "ஒருபைச தமிழன்" மற்றும் "தமிழன்" இதழ்களில் உரையாடல் செய்த பண்டிதர் க அயோத்திதாசர் அவர்களின் 165 ஆவது பிறந்த நாள் நிகழ்வாக, அவர் பெயரில் வடிவமைத்திருக்கும் http://www.ayothidhasar.com/ அயோத்திதாசர் இணைய தளத்தை அறிமுக விழா ஒன்றை மதுரைக்கல்லூரி தத்துவத்துறை மற்றும் அயோத்திதாசர் ஆய்வு நடுவம் இணைந்து மே மாதம் 22 இந்தேதி மாலை 5 மணிக்கு மதுரைக்கல்லூரி தத்துவத்துறை கருத்தரங்க அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு தத்துவத்துறை தலைவர் முனைவர் ஆர் .முரளி தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில் நூறு வருடங்களுக்கு பிறகு நமக்கு கிடைத்த பொக்கிஷம், அதை வெறும் அலங்கார பொருளாக்காமல், ஆய்வு நோக்கில் அடுத்த கட்டத்திற்கு இளைய தலைமுறைக்கு எடுத்துசெல்ல வேண்டுமென்றார்.
நிகழ்ச்சியின் துவக்கமாக பாரி.செழியன் தயாரித்து இயக்கிய "பண்டிதர் க அயோத்திதாசர்" ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த வேலூர் பௌத்த பிக்கு அஷ்பகோஸ் அவர்கள் மடி கணினி மூலம் அயோத்திதாசர் இணையதளத்தை அறிமுகம் செய்தார். இணைய ஒருங்கிணைப்பாளர் பாரி.செழியன் அவர்கள் அயோத்திதாசர் இணைய தளத்தின் சிறப்புகளை விவரித்தார். "இணைய தளத்தில் அயோத்திதாசர் நடத்திய "ஒருபைசத்தமிழன்" மற்றும் "தமிழன்" இதழ்களின் தொகுப்பு அனைத்துமே (pdf file ) படிக்கலாம் பயன்படுத்தலாம். அதுபோலவே தலித் அமைப்புகள் நடத்திய அரசியல் போராட்டங்கள், மாநாடுகள், மாநாட்டுத் தீர்மானங்கள், துண்டறிக்கைகள் ..போன்றவை படிக்கலாம். தலித் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் சமூக விடுதலைக்கான பங்களிப்பையும் அறியலாம். இணைய தளத்தில் மிக சிறப்பாக " ஒருபைசா தமிழன்" என்ற இனைய இதழ் ஒன்றும் உள்ளது. அதில் தலித்களின் தனித்துவ பிரச்சனைகளை பொது தளத்தில் உரையாடல் செய்யும். தலித்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொண்டே தலித் வரலாற்றை இருட்டடிப்புச்செய்த வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் . தலித் கலை இலக்கிய ஆர்வலர்க்கு, இளம் ஆய்வு மாணவர்களுக்கு, சாதி ஒழிந்த சமுதாயம் காண விழையும் அனைத்து தமிழருக்கும் ஒரு மாற்று இணைய வெளியாக செயல்படும் என்றார்.

அடுத்து சிறப்புரை ஆற்றிய முனைவர் ஞான. அலாய்சியஸ் அவர்கள் அயோத்திதாசரின் பன்முக ஆளுமைகளை விரிவாக விளக்கினார். பண்டிதரின் பகுத்தறிவு, வேத பிராமணீய ஆதிக்க, பௌத்த, தமிழ்த்தேசிய சிந்தனைகளை விளக்கினார். வே அலெக்ஸ் தன்னுடைய நன்றி உரையில் இதுவரையில் பண்டிதரின் சிந்தனைகளை ஏன் மறைக்கப்பட்டது என்றும் அது தலித் சிந்தனையாளர்களால் மட்டுமே அது வெளியே கொண்டு வரப்பட்டது என்று கூறி நிகழ்ச்சியை சிறப்பித அனைவருக்கு நன்றி கூறினார்